Monday, November 10, 2008

Canada place...


Thats it...the place way above above the steps...tats what everyone is running for to reach - including me. Not just one but I myself n anyone who reads this would have been a close audience to such incidents. None of us skip those and traverse through it at some point of time. But the hard reality is there are so many people n hearts that are being hurt in this marathon run to conquer our fears. I being among the one make sure that when I reach that place, I should deserve it; having held out my hands to those down...

Sunday, November 09, 2008

வெளிச்சம் :


வாழ்க்கையின் ஊடே நடந்து செல்லும் வெளிச்சம் பெண்...
- எழுதினேன் இவ்வரிகளை கல்லூரி முதலாம் ஆண்டில்...
சரியாக உணராதபோது!
~ஆனால்
இப்போது என்னுடைய, என் உலகத்திற்கு பரிச்சயமான
வழிகாட்டிகளில் அதுவும் ஒன்று...
- இப்போது சரியாக உணர்ந்தவர்களில் நானும் ஒருவன்...

கனவுகளின் வண்ணங்கள்:


தினம் விழித்து எழுவதற்கு முன்னால் வரும்
கனவுகளில் வண்ணங்கள் குறைவாக வருவதற்காக
வருந்தி வசிப்பவர்கள் உள்ள -
அதே கோளில்தான் வசிக்கின்றனர்
ஒரு வேலை உணவு கூட -
கிடைக்குமா, கிடைக்காதா என்று அறியாதவர்களும்!
வாழ்க்கையை ஒரு போராட்டமாக நடத்துபவர்களும்!

Thursday, November 06, 2008

சொல்லாதது:


சொல்வதை கேட்பதற்காக - கிரகாம் பெல்
கண்டுபிடித்தான் தொலைபேசியை !
சொல்லாததையும் கேட்பதற்காக முயன்று கொண்டிருக்கிறார்கள்
இதயத்தை தொலைத்துவிட்ட - நம்மவர்கள்...

Sunday, November 02, 2008

இடைவெளி:

இரு புள்ளிகளுக்கு நடுவே உள்ள
இடைவெளியை விட
மெல்லிய நட்பு நம்முடையது - ஆனால்
இப்போதுள்ள இடைவெளியில்
காலச்சக்கரமே வட்டமடித்து சுழன்று கொண்டிருக்கின்றது...



பயணம்:


சில அடி தூரங்கள் நடப்பதற்கே தயங்கியவன்,
உன் நினைவுகள் என்னைக் கடப்பதற்காகவே
- தயாராகிறேன்
நடப்பதற்காக - என் வாழ்க்கையின் முடிவில் உள்ள
என் கல்லறையை நோக்கி - ஒரு புன்னகையுடன்!

பிடித்தது:


உனக்கு என்னைப் பிடித்தது
எனக்குப் பிடித்தது!
தொலைபேசியில் உன் குரலைக் கேட்பது
எனக்குப் பிடித்தது!
நீ பார்த்தும் பார்க்காமல் சென்றது
எனக்குப் பிடித்தது!
நாமிருவரும் பார்த்துக் கொள்ளாத நாட்கள்
எனக்குப் பிடித்தது!
நீண்ட நாள் கழித்து என்னைப்பார்த்து புன்னகைத்தது
எனக்குப் பிடித்தது!
உனக்காக என் நிமிடங்களை செலவழிப்பது
எனக்குப் பிடித்தது!
நீ என் முன்னிருந்தபோது நான் யாரையுமே பார்க்காதது
எனக்குப் பிடித்தது!
என் கனவில் கூட நீ என்னை நெருங்காதது
எனக்குப் பிடித்தது!
உன்னைப் பார்த்து பேசி பழகாத இந்த ஏழு வருடங்கள்
எனக்குப் பிடித்தது!
என் நினைவாற்றலை தினமும் தட்டி எழுப்பும் உன் நியாபகங்கள்
எனக்குப் பிடித்தது!
உன்னால் நான் பார்த்த உலகம் சில வருடங்களே என்றாலும்
எனக்குப் பிடித்தது!
இந்த இடைவெளியில் நான் கற்றவை - வாழ்க்கையிடமிருந்து
- மிகவும் பிடித்தது...

அறிந்தும் அறியாமலும்:


எதையும் அறியாதபோது உன்னை அறிந்தேன் இன்று எல்லாம் அறிந்து புரிந்த பின்னரும் நீ எப்படி இருக்கிறாய் என்பதை அறியாமலிறுக்கிறேன் !

பிம்பங்கள்:


நான் இதுவரை கடந்து வந்த பாதையில் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தவை சில பிம்பங்கள் பிடித்தவை - என் நினைவுப் பெட்டகத்தில் பத்திரமாக!

யாரைத் தேடி:


நானும் நாட்களும் நடக்கின்றோம்
யாரைத் தேடி !

உனக்காக:


கண் சிமிட்டுமுன் சிக்னலை கடப்பவன்
கண்களை சிமிட்டாமல் உனக்காக காத்திருக்கிறேன்
- சில வருடங்களாய்

தேடல்:


பிடிக்க நினைத்தது மலையை மட்டும்
பிடிபடுவதோ
மின்கம்பிகளும், கம்பங்களும் - விழிகளிலும்,
புகைப்படக் கருவியிலும்...

மொழிபெயர்ப்புகள்...A Self Portrait!




கவிஞன் அல்ல நான்;
கவியாக விருப்பமும் இல்லை;
நான் விட்டு வந்த காலடிச்சுவடுகளின் ஓசையை,
என் தாய்மொழியில் மொழிபெயர்த்திடும், ஒரு சிறு முயர்ச்சி!

Wednesday, October 22, 2008

Miss!


It doesn't take one too long to realise the things that he/ she misses. For me the list is only growing non-stop, but with varying frequencies. At this point of time, place is the only reason that makes me realize it. I miss many that are in chennai!
Family;
Home food;
My Bike;
Sathyam theatre;
Mount Road;
Heat;
Sweat;
Long sound horns at signals;
South Indian food;
Petty shops;


But I should accept the fact that time has recently started playing for me on my side. Nevertheless it does take some things away in return.

...புதிதாக என்ன செய்வது என்று யோசித்தபோது, செய்ய நினைத்தது - அடுத்த இடுகையில்!

Watchin the fall of leaves!




What can I say, the colors of leaves are changing rapidly, especially the Maple leaves...these are the most wonderful colors a painter would love to have after a hard day of mixing colors together. And guess what, everyday I walk to and fro from the office I see nature's hand playing around in getting the best colors that one cannot even imagine sometimes. It is starting to get very cold and it would not be long before nature throws those white flowers on the steet of Vancouver. In India I would have to travel to the extreme north to feel it. But here in "The Rainy City" I juz have to walk out of my apartment. Eagerly waiting for that even though transit is something that would be a challenge especially during those period.

Blog Archive