Sunday, November 02, 2008

பிடித்தது:


உனக்கு என்னைப் பிடித்தது
எனக்குப் பிடித்தது!
தொலைபேசியில் உன் குரலைக் கேட்பது
எனக்குப் பிடித்தது!
நீ பார்த்தும் பார்க்காமல் சென்றது
எனக்குப் பிடித்தது!
நாமிருவரும் பார்த்துக் கொள்ளாத நாட்கள்
எனக்குப் பிடித்தது!
நீண்ட நாள் கழித்து என்னைப்பார்த்து புன்னகைத்தது
எனக்குப் பிடித்தது!
உனக்காக என் நிமிடங்களை செலவழிப்பது
எனக்குப் பிடித்தது!
நீ என் முன்னிருந்தபோது நான் யாரையுமே பார்க்காதது
எனக்குப் பிடித்தது!
என் கனவில் கூட நீ என்னை நெருங்காதது
எனக்குப் பிடித்தது!
உன்னைப் பார்த்து பேசி பழகாத இந்த ஏழு வருடங்கள்
எனக்குப் பிடித்தது!
என் நினைவாற்றலை தினமும் தட்டி எழுப்பும் உன் நியாபகங்கள்
எனக்குப் பிடித்தது!
உன்னால் நான் பார்த்த உலகம் சில வருடங்களே என்றாலும்
எனக்குப் பிடித்தது!
இந்த இடைவெளியில் நான் கற்றவை - வாழ்க்கையிடமிருந்து
- மிகவும் பிடித்தது...

4 comments:

Cynthia said...

If this is written by u..applause to u.

Cruz said...

ya, written by me...few lines from my travel book...but covers few years!

Meow said...

beautiful really really beautiful.... i dono watta tell...

Cruz said...

thx. even I become speechless, ven i read it.

Blog Archive